மீண்டும் அந்த நிறுவனத்திடம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

தென் கொரியாவின் சீகெனி, எஸ்டி பயோசென்சார், ஜெர்மனியின் அல்தோனா டயாக்னஸ்டிக், அமெரிக்காவின் லைப் டெக்னாலஜிஸ், சீனாவின் ஷாங்காய் போரம் ஆகிய நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே தென் கொரியாவின் எஸ்டி பயோசென்சார் நிறுவனத்திடம் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. அந்த கருவிகள் சிறப்பானதாக இருந்ததால், மீண்டும் அந்த நிறுவனத்திடம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் பிசிஆர் கருவிகள், ஆர்என்ஏ பிரித்தெடுத்து ஆய்வு செய்யும் கருவிகள் என 10,63,500 கருவிகள் உள்ளன. கொரோனா சோதனையை விரைவுபடுத்த வேண்டும் என்பதற்காக 63 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்கப்பட உள்ளது. அவை விரைவில் இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா பரிசோதனைக்கு துல்லியமாக முடிவுகளை தெரிந்து கொள்ள பிசிஆர் கருவிகளை தான் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இந்த கருவிகளை தான் பரிந்துரை செய்துள்ளது. தற்போது வரை 10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.